Video: பார்வையாளர்களை நொடியில் கலாய்த்த டேவிட் வார்னர்!

அட ஒன்றும் இல்லைபா... என்று சொல்லாமல் சொல்லும் டேவிட் வார்னரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Last Updated : Aug 4, 2019, 06:15 PM IST
Video: பார்வையாளர்களை நொடியில் கலாய்த்த டேவிட் வார்னர்! title=

அட ஒன்றும் இல்லைபா... என்று சொல்லாமல் சொல்லும் டேவிட் வார்னரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியின் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 284 ரன்களும் இங்கிலாந்து அணி 374 ரன்களும் குவித்தன.

இதையடுத்து, 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலியா தொடங்கியது. வார்னர், பான்கிராப்ட் என தொடக்க வீரர்கள் இருவரையும் முதல் 10 ஓவர்களுக்குள்ளாகவே ஆஸ்திரேலியா இழந்தது. வார்னர் 8 ரன்களிலும் பான்கிராப்ட் 7 ரன்களிலும் வெளியேறினர். இதனால், அந்த அணி 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதைத்தொடர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்குக் கைகோத்த உஸ்மான் கவாஜா - ஸ்டீவன் ஸ்மித் ஜோடி நிதானமாக விளையாடியது. இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தது. கவாஜா 40 ரன்கள் சேர்த்த நிலையில், ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹெட், ஸ்மித்துடன் சேர்ந்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

I LOVE HIM  #Ashes

A post shared by Aussie A (@63notout.forever) on

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஸ்மித் 46 ரன்களுடனும் ஹெட் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 34 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. முதல் இன்னிங்ஸில் 144 ரன்கள் குவித்து அசத்திய ஸ்மித், இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இதனிடையே மூன்றாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் எல்லைக்கோடு அருகே ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது, இங்கிலாந்து ரசிகர்கள் வார்னர் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தை நினைவுபடுத்தி கோஷமெழுப்பினர்.

இந்நிலையில், வார்னரை சீண்டும் வகையில் அவர்கள் கோஷமெழுப்பவே, தனது இரண்டு பாக்கெட்டுகளையும் காட்டி அதில் ஒன்றும் இல்லை என்பது போல வார்னர் செய்துகாட்டினார். சிரித்துக்கொண்டே வார்னர் தனது பாக்கெட்டுகளில் ஒன்றும் இல்லை என்று காட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Trending News