Vijayakanth Last Rites In Tamil: மறைந்த தேமுதிக தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் இன்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரது உடலுக்கு அவரது மனைவி பிரேமலதா மற்றும் அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகப் பாண்டியன், உறவினர்கள் தங்களின் இறுதி சடங்கை மேற்கொண்டனர்.
24 போலீசார் தலா மூன்று சுற்றுகளுடன் மொத்தம் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க விஜயகாந்திற்கு முழு அரசு மரியாதை செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன், மா. சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், பெஞ்சமின், மக்களவை உறுப்பினர் டி.ஆர் பாலு, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தாமாக தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் பங்கேற்று மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல... ஒட்டு மொத்த தமிழினத்திற்கே பேரிழப்பு!
#WATCH | Tamil Nadu: Last rites of actor and DMDK chief Vijayakanth being performed with full State Honours at the Koyambedu DMDK office in Chennai pic.twitter.com/yuYMBVpxiP
— ANI (@ANI) December 29, 2023
சுமார் மூன்று மணியளவில் அவரது உடல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலமாக புறப்பட்டு மாலை சுமார் 5.40 மணியளவில் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இறுதி ஊர்வலத்தின்போது பல்லாயிரக்கணக்கானோர் வழிநெடுக காத்திருந்து கேப்டன், கேப்டன் என்ற முழக்கத்துடன் அவருக்கு பிரியாவிடை அளித்தனர். சுமார் 12 கி.மீ., தூரத்தில் சுமார் 2.30 மணிநேரத்திற்கு மேலாக ஊர்வலம் நடைபெற்றது. சென்ட்ரல் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை, சேத்துபட்டு, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, ஸ்கைவாக் மால் வழியாக கோயம்பேடு கொண்டுவரப்பட்டது.
#WATCH | Tamil Nadu CM MK Stalin arrives at the Koyambedu DMDK office in Chennai to attend the last rites of DMDK President and Actor Vijayakanth. pic.twitter.com/momYEL9zK4
— ANI (@ANI) December 29, 2023
அங்கு தலைவர்கள் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னரும், குடும்ப வழிமுறைப்படி நடந்த சடங்குகளுக்கு பின்னரும் சந்தனப்பேழையில் உடல் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மலர்தூவி, மணல்தூவி அவரது உறவினர்களும், நண்பர்களுக்கு அவரது உடலுக்கு தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
மாணிக்கத்தை, தங்கமான உள்ளம் கொண்ட மனிதரை இழந்துவிட்டோம்-குஷ்பூ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ