அலட்சியத்தால் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் வீணாகும் நெல் மூட்டைகள்!

அலட்சியத்தால் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் வீணாகி வருகிறது என்று எஸ்.டி.பி.ஐ கட்சி குற்றம் சாட்டி உள்ளது  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 18, 2021, 03:46 PM IST
அலட்சியத்தால் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் வீணாகும் நெல் மூட்டைகள்! title=

அலட்சியத்தால் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் வீணாகி வருகிறது என்று எஸ்.டி.பி.ஐ கட்சி குற்றம் சாட்டி உள்ளது.  இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கிடங்கில் வைக்கப்படுவதற்காக கொள்முதல் நிலையங்களில் லாரிகளில் ஏற்றப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துவிட்டதால் தானியங்கள் வீணாகின்றன என்றும், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின்றன என்றும், செங்கல்பட்டு அருகே நெல் சேமிப்பு கிடங்கில், உரிய பாதுகாப்பு இல்லாததால், மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகின்றன என பல்வேறு ஊடகங்களில், தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் வீணாகும் செய்திகள் வெளியாகியுள்ளது மிகுந்த கவலையளிக்கின்றது.

ALSO READ என்ஜினீயரை கொள்ளையனாக மாற்றிய கொரோனா!

தமிழகத்தின் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குறுவை, தாளடி மற்றும் சம்பா சாகுபடியின் போது, அறுவடை செய்யப்படும் நெல், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை குடோன்களுக்கு ஏற்றிச் செல்வதிலும், முறையான பாதுகாப்பு இன்றி திறந்த வெளியில் வைக்கப்படுவதாலும், கொள்முதல் நிலையங்களில் போதுமான சிமென்ட் தரைத்தள வசதி இல்லாததாலும், அவை மழையில் நனைந்து வீணாவது என்பது தொடர்கதையாக உள்ளது.

paddy

தற்போது பருவ மழை தொடங்கி விட்டதால் ஏற்கனவே ஓரளவு ஈரப்பதமாக இருக்கும் நெல் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக நனைந்து வீணாகி முளைப்புக் கட்டிவிடும் சூழல் ஏற்படுகிறது. இதனால் முளைப்புவிட்ட நெல்லை பயன்படுத்த முடியாத அவலம் ஏற்படுவதோடு அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது.  கனமழை பெய்த நேரத்தில், நெல் மூட்டைகளை அதிகாரிகள் பராமரிக்கவில்லை எனவும், நெல் மூட்டைகள் மீது சரிவர தார்பாய்கள் போடாததால், அவை மழையில் நனைந்து, முளைத்து வீணாகி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு அரசு அதிகாரிகளின் அலட்சியமே மிக முக்கிய காரணம் என விவசாயிகளும், ஊழியர்களும் குற்றம் சாட்டுகின்றனர். 

paddy

ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய அவலம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. தமிழக அரசு இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். உலகளவில் பட்டியினியால் வாடுவோர் எண்ணிக்கை அதிகம் உள்ள இந்தியாவில் இதுபோன்று உணவு தானியங்கள் வீணாவதை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஆகவே, நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்கும் வகையில் நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் குடோன்களை அமைப்பதோடு அவற்றின்  எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். 

மேலும், புதிய உணவு தானிய பாதுகாப்பு கிடங்குகளை அமைக்கும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதேபோல் விவசாயிகளிடமிருந்து விரைவாக நெல்லை கொள்முதல் செய்வதோடு, கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை வீணாகாமல் உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
என்  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ போக்சோ சட்டம் சொல்வது என்ன? குழந்தை உரிமைகள் அமைப்பாளர் ஆண்ரூ சேசுராஜ் விளக்கம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News