TN Government: 7 பேர் விடுதலை: நீண்டகால பரோல் வழங்க முடிவு செய்துள்ளதா தமிழக அரசு?

7 பேரையும் நீண்ட பரோலில் அனுப்புவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தமிழக அரசின் உயர்மட்ட அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். முறையான விடுதலைக்கு தாமதம் ஆனாலும், நீண்ட கால பரோல் என்பது இந்த 7 பேருக்கும் ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 17, 2021, 05:01 PM IST
  • ராஜீவ் கொலையில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் - அரசியல் கட்சிகள்.
  • முறையான விடுதலைக்கு தாமதம் ஆனாலும், நீண்ட கால பரோல் என்பது இந்த 7 பேருக்கும் ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும்.
  • 7 பேரையும் நீண்ட பரோலில் அனுப்புவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் -அரசு.
TN Government: 7 பேர் விடுதலை: நீண்டகால பரோல் வழங்க முடிவு செய்துள்ளதா தமிழக அரசு?   title=

சென்னை: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன், முருகன், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோரை விடுதலை செய்வது குறித்து பல நாட்களாக பலத்த விவாதம் நடந்து வருகிறது. எனினும், இன்னும் இதில் எந்த வித முடிவும் எடுக்கப்படவில்லை.

முன்னதாக, இவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. எனினும், சுமார் 30 ஆண்டுகளாக இவர்கள் சிறையில் இருப்பதால், இவர்களை விடுவிப்பது என கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக ஆளுநரிடம் சென்ற இந்த தீர்மானத்தை பின்னர் அவர் குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்பிவைத்துள்ளார்.

ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், இந்த தீர்மானத்தை செயல்படுத்த வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார். அது பற்றி இன்னும் எந்த வித முடிவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இந்த 7 பேருக்கும் நீண்டகால சிறைவிடுப்பு வழங்க தமிழக அரசு (Tamil Nadu) முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், மற்ற நான்கு பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

ALSO READ:பேரறிவாளன் இனி சிறை செல்லக் கூடாது: அற்புதம்மாள் கோரிக்கை

இதற்கு முன்னர் நளினி, பேரறிவாளன் (Perarivalan) ஆகியோர் பரோலில் வெளிவந்தபோது, அவர்கள் எந்த விதமான சட்டவிரோத மற்றும் தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடாததால், நீண்டகால பரோலுக்கு தமிழகம் பரிந்துரை செய்ததை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகமும் இதற்கு ஒப்புதல் அளித்து விட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில், 7 பேரையும் நீண்ட பரோலில் அனுப்புவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தமிழக அரசின் உயர்மட்ட அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். முறையான விடுதலைக்கு தாமதம் ஆனாலும், நீண்ட கால பரோல் என்பது இந்த 7 பேருக்கும் ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும்.  

ராஜீவ் கொலையில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் தொடர்ந்து கொரிக்கை வைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுவதால், அவரது பரோலை நீட்டிக்க வேண்டும் என அவரது தாய் அற்புதம்மாள் முதல்வர் ஸ்டாலினிடம் (CM Stalin) கேட்டுக்கொண்டார். பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியமைக்காக அவர் முதல்வருக்கு நன்றியும் தெரிவித்தார்.

ALSO READ:புழல் சிறையில் இருந்து 30 நாள் ஜாமீனில் பேரறிவாளன் விடுவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News