பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு சென்னை பெருமாள் பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தமிழக பாஜக சார்பில் தங்க மோதிரம், பரிசுப்பொருள் வழங்கப்பட்டது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் பிறந்தநாளில், அன்றைய தினம் பிறந்த குழந்தைகளுக்கு அதிமுகவினர் மோதிரம் அளித்து கட்சி பெயரினை பிரகடனம் செய்தது போல் தற்போது, தமிழக பாஜக பிரதமர் மோடியின் பிறந்தநாள் அன்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அளித்து தங்கள் கட்சியினை பிரகடன் செய்து வருகின்றனர்.
நம் பாரதப் பிரதமர் மதிப்பிற்குரிய நரேந்திர மோடி அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பெருமாள் பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து,பரிசுப்பொருள்களும் வழங்கப்பட்டது.இன்றைய தினம் சேவை தினமாக நாடுமுழுவதும்
கொண்டாடப்படுகிறது. pic.twitter.com/wNMmz2sKG9— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) September 17, 2018
மேலும் கன்னியாகுமாரி மாவட்டத்தில் சிறப்பு மருத்துவமுகாம் ஏற்படு செய்யப்பட்டு நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
On Honble PM Shri @narendramodi ji's birthday, @BJP4TamilNadu Kanyakumari District conducted Medical Camp. pic.twitter.com/boADDIJG6h
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) September 17, 2018
வரும் பொது தேர்தலில் வெற்றிப்பெற்று எப்படியாவது தமிழகத்தில் தாமரையினை மலர வைத்துவிட வேண்டும் என பாஜக-வினர் முயற்சிகள் பல மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக தமிழக பாஜக தேசிய செயலாளர் H ராஜா அவர்கள் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து தமிழர்களின் நினைவில் பாஜக-வினை நிலை நிறுத்தி வருகின்றார். ஆனால் இவையனைத்தும் வரும் தேர்தலில் ஓட்டு வாங்கி தருவதற்கு பதிலாக நெட்டிசன்களின் மீம்ஸ்களுக்கே தீனியாக மாறிவிடுகிறது.