கொரோனா தோற்றால் உயிரிழக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு 50 லட்சம் நிதியுதவி: EPS

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் உயிரிழக்க நேரிட்டால் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

Last Updated : Apr 22, 2020, 02:47 PM IST
    • கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிதியுதவி.
    • மருத்துவம், காவல், உள்ளாட்சி, தூய்மைப்பணியாளர் உள்பட அனைத்து துறை பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டல் ரூ.50 லட்சம் நிதியுதவி.
    • சென்னையில் செய்யப்படும் கொரோனா பரிசோதனையை கணிசமாக உயர்த்த நடவடிக்கை.
    • சென்னை மாநகர கூடுதல் மண்டல அலுவலர்களாக கார்த்திகேயன், பாஸ்கரன் நியமனம்.
    • கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் மருத்துவர் உள்ளிட்ட அனைத்து துறையினரின் உடல் பாதுகாப்புடனும், உரிய மரியாதையுடனும் அடக்கம் செய்ய நடவடிக்கை.
    • கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு அரசு ஊழியர், தனியார் பணியாளர் உயிரிழந்தால் பணியை பாராட்டி விருது, சான்றிதழ் வழங்கப்படும்.
கொரோனா தோற்றால் உயிரிழக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு 50 லட்சம் நிதியுதவி: EPS  title=

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் உயிரிழக்க நேரிட்டால் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக பணிபுரியும் புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் சைமன், இரண்டு வாரங்களுக்கு முன்பு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மருத்துவர் சைமன் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து, கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த தனியார் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சைமனின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார்.உயிரிழந்த மருத்துவரின் மனைவி ஆனந்தியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய அவர், மகன், மகளின் எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் உயிரிழக்க நேரிட்டால் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவம், காவல், உள்ளாட்சி, தூய்மைப் பணியாளர் உள்பட அனைத்து துறை பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் இந்த நிதியுதவி வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். அத்துடன் கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் மருத்துவர் உள்ளிட்ட அனைத்துத்துறை பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்கபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவம், காவல், உள்ளாட்சி, தூய்மைப்பணியாளர் உள்பட அனைத்து துறை பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டல் ரூ.50 லட்சம் நிதியுதவி அளிப்பதாகவும் அவர் டேறிவித்துள்ளார். 

கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு அரசு ஊழியர், தனியார் பணியாளர் உயிரிழந்தால் பணியை பாராட்டி விருது, சான்றிதழ் வழங்கப்படும். சென்னையில் செய்யப்படும் கொரோனா பரிசோதனையை கணிசமாக உயர்த்த நடவடிக்கை. சென்னை மாநகர கூடுதல் மண்டல அலுவலர்களாக கார்த்திகேயன், பாஸ்கரன் நியமனம். கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் மருத்துவர் உள்ளிட்ட அனைத்துத்துறை பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் அனைவரின் உடலும் பாதுகாப்புடனும், உரிய மரியாதையுடனும் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். 

Trending News