முன்னாள் முதல்வர்களின் பெயர்களில் 3 Metro நிலையங்களில் பெயர் மாற்றம்: தமிழக அரசு

சென்னையில் உள்ள மூன்று மெட்ரோ ரயில் நிலையங்கள் மறைந்த முதலமைச்சர்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் ஜே.ஜெயலலிதா ஆகியோரின் பெயர்கள் கொண்டு மறுபெயரிடப்படும் என தமிழக அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 1, 2020, 05:17 PM IST
  • ஆலந்தூர் நிலையம் 'அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ' என்று மறுபெயரிடப்படும்.
  • சென்ட்ரல் மெட்ரோவின் பெயர் 'புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ' என மாற்றப்படும்.
  • CMBT மெட்ரோ நிலையம் 'புரட்சித் தலைவி டாக்டர் ஜே ஜெயலலிதா CMBT மெட்ரோ' என்றும் அழைக்கப்படும்.
முன்னாள் முதல்வர்களின் பெயர்களில் 3 Metro நிலையங்களில் பெயர் மாற்றம்: தமிழக அரசு title=

சென்னையில் உள்ள மூன்று மெட்ரோ ரயில் நிலையங்கள் (Metro stations) மறைந்த முதலமைச்சர்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் ஜே.ஜெயலலிதா ஆகியோரின் பெயர்கள் கொண்டு மறுபெயரிடப்படும் என தமிழக அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இந்த நடவடிக்கையை வரவேற்ற பாஜக மாநில பிரிவு, வேறு சில மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மறைந்த தலைவர்களான பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் பெயர்களை வைக்க வேண்டும் என்று கோரியது.

அரசாங்க உத்தரவின்படி, ஆலந்தூர் நிலையம் 'அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ' என்றும், சென்ட்ரல் மெட்ரோ 'புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ' என்றும், CMBT மெட்ரோ நிலையம் 'புரட்சித் தலைவி டாக்டர் ஜே ஜெயலலிதா CMBT மெட்ரோ' என்றும் அழைக்கப்படும்.

உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை மாநில அரசு ஏற்றுக்கொண்டதையடுத்து நிலையங்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் கே பழனிசாமி (K Palanisamy) தெரிவித்தார்.

நகரத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கீழ் அதிமுக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அவர் பட்டியலிட்டார்.

சென்னை (Chennai) மெட்ரோ ரெயிலின் இரண்டாம் கட்டமாக, 61,843 கோடி ரூபாய் திட்டத்தில் மூன்று வழிப்பாதைகள் உள்ளன: மாதவரம் முதல் சிப்காட், லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி மற்றும் மாதவரம் முதல் ஷோலிங்கநல்லூர்.

"மாநில அரசு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நாங்கள் தற்போது மத்திய ஒப்புதல் மற்றும் நிதியுதவிக்காக காத்திருக்கிறோம்," என்று முதல்வர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அரசியலமைப்பின் ஆதாரமாக இருக்கும் அம்பேத்கர் ஆகியோரின் பெயர்களில், விமான நிலையத்திலும் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திலும் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முதலமைச்சர் பெயர்களை மாற்ற வேண்டும் என்று மாநில பாஜக கோரியது.

முதல்வர் பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், தமிழ்நாட்டிலிருந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களும் மற்ற மெட்ரோ நிலையங்களுக்கு வைக்கப்பட வேண்டும் என்றார்.

பின்னர், மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவனின் கீழ் பாஜகவின் தூதுக்குழு தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தை சந்தித்து, இது தொடர்பாக கட்சியின் கோரிக்கையை எடுத்துரைத்தது.

ALSO READ: காவலர் தேர்வில் வெற்றி பெற்று நியமனம் பெறாதோருக்கு பணி வழங்க வேண்டும்: PMK

Trending News