தமிழக அரசுப் பள்ளிகளில் 1, 6, 9 ஆம் வகுப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை இன்று தொடங்குகிறது..!
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் LKG, 1, 6 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் நடைபெறுகிறது. மாணவரை சேர்த்துவிட்டு பின்னர் தேவையான சான்றிதழ்களை பெற்று கொள்ள தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா காலமாக இருப்பதால் மார்ச் 24 முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆல்பாஸ் போடப்பட்டுள்ளது. +1, +2 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு மதிப்பெண் பட்டிலும் கொடுக்கப்பட உள்ளன.
பள்ளிகளில் புதிதாக மாணவர் சேர்க்கை எப்போது நடைபெறும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அரசு பள்ளிகளில் LKG, 1, 6 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 17 ஆம் தேதியிலும் 24 ஆம் தேதியில் இருந்து மேல்நிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க அரசு, தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. 2 முதல் 10 ஆம் வகுப்புவரை வேறு பள்ளிகளில் சேர விரும்புபவர்களுக்கும் சேர்க்கை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
ALSO READ | பிரபல பாடகர் SPB-யின் உடல்நிலை குறித்து மகன் வெளியிட்ட வீடியோ...!!
இந்நிலையில், அரசு, தனியார் பள்ளிகளில் இன்று முதல் LKG, 1, 6 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடபெற உள்ளது. இதில் சமூக இடைவெளியை பின்பற்றி, உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், மாணவர் சேர்க்கை பணிகளை நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதலே விலையில்லா பாடப்புத்தகங்களையும், பைகள் உள்ளிட்ட அனைத்து விலையில்லா பொருட்களையும் மாணவர்களுக்கு வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சில சான்றிதழ்கள் இல்லை என்றாலும், முதலில் மாணவரை சேர்த்துவிட்டு, பின்னர் தேவையான சான்றிதழ்களை பெற்று கொள்ள தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் வரை ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.