வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் நேற்றே ஒப்புதல் அளித்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்பட்டதாக மத்திய சட்ட அமைச்சகம் அரசிதழில் அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் முதல் நாளிலேயே, மக்களவையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது விவசாயிகளின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என நாம் தமிழர் கட்சியின் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்
மன்னார்குடி விவசாயிகளின் தீவிர போராட்டம் வெற்றி, மோடிக்கு ஏற்பட்ட தோல்வியே வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற்றார் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறக் கோரும் விவசாயிகளின் போராட்டம் ஓராண்டை நெருங்குகிறது, நவம்பர் 29ம் தேதியன்று நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி நடத்த திட்டம்
75 வது சுதந்திர தினத்தை விவசாயத் தொழிலாளர்களின் சுதந்திர திருநாள் என்ற பொருள் கொள்ளும் "கிசான் மஸ்தூர் ஆசாதி சங்கம் திவாஸ்" நாளை இந்திய விவசாயிகள் கொண்டாடினார்கள்.
புது டெல்லி: ராகுல் காந்தி ட்விட்டரில் பக்கத்தில், "ஒரு கவிதையுடன் விவசாயிகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார். கவிதையின் மூலம், அவர் பிரதமர் மோடியை விமர்சித்தும், விவசாயிகளுக்காக தான் நாங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியின் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் காவல்துறை இன்று காலை பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது. பல்வேறு போராட்ட தளங்களிலிருந்து விவசாயிகள் ஜந்தர் மந்தரை நோக்கி செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாநிலங்களவை எம்.பி. சுபாஷ் சந்திராவுக்கு மிரட்டல் விடுத்த ரவி ஆசாத் தற்போது ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதலாவுக்கும் மிரட்டல் விடுத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை "ஹோலிகா தஹான்" என்ற பாரம்பரிய நிகழ்வை கொண்டாடும் வகையில் மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களின் நகல்களை எரித்ததாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.
"100 நாட்கள் முடிந்துவிட்டன, லட்சம் விவசாயிகள் டெல்லியில் பல எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் ... இந்த பண்ணை சட்டங்கள் விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்டிருந்தால், அவர்கள் ஏன் இன்னும் தடுத்த நிறுத்தப்படுகிறார்கள்?"
மார்ச் 1 முதல் பால் லிட்டருக்கு ரூ .100 க்கு விற்கப்படும் என்று காப் பஞ்சாயத்து முடிவு செய்துள்ளது. இருப்பினும், இந்த முடிவு வெளியில் அல்லது டெய்ரியில் விற்கப்படும் பாலுக்கு மட்டுமே பொருந்தும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.