பொங்கல் பண்டிகையொட்டி சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கும் 29,213 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் MR விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
கோவை மேட்டுப்பாளையம் அருகே இன்று அதிகாலை வீடுகளில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
“மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்” என்று அவசரச்சட்டம் பிறப்பித்திருக்கும் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக - கர்நாடக மக்களின் நல்லுறவைக் கருத்தில் கொண்டு, காவிரி இறுதித் தீர்ப்புக்கு எதிராக மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் கூடுதலாக மண்ணெண்ணெய் ஒதுக்கக் கோரி டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து அமைச்சர் காமராஜ் வலியுறுத்தியுள்ளார்!
அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் இருபாலருக்கும் தனித்தனியாக, அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்!
சென்னையில் புதிதாக 2,00,000 மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.