நூல்கோல் ஆரோக்கிய நன்மைகள்: காய்கறிகளில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான பல வித ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தினமும் போதுமான அளவு காய்கறிகளை சாப்பிடுவதால், நம் உடல் ஆரோகியம் நன்றாக இருக்கும். காய்கறிகள் மூலம் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலமாவதுடன் பல வித ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன.
உடலுக்கு பல அற்புத நன்மைகளை அளிக்கும் காய்களில் நூல்கோலும் ஒன்றாகும். நூல்கோலில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மற்ற வேர் காய்களைப் போலவே நூல்கோலும் சத்துக்களின் புதையலாக உள்ளது. இதில் உள்ள கலோரிகளின் அளவும் குறைவு.
நூல்கோலில் வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ மற்றும் கே, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சோடியம் ஆகியவை நிறைந்துள்ளன. இது குளிர்காலத்தில் நமக்கு ஊட்டமளிக்க உதவுகிறது. நூல்கோல் மற்றும் அதன் இலை கீரைகள் இரண்டும் மிகவும் சத்தானது மற்றும் சுவையானது. நூல்கோல் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. குளிர்காலத்தின் தினசரி உணவில் இதை ஏன் சேர்க்க வேண்டும்? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | Osteoporosis நோய் அண்டாமல் இருக்க... எலும்புகளை வலுவாக்கும் ‘சூப்பர்’ ஜூஸ்கள்!
நூல்கோலின் நன்மைகள்:
1. நூல்கோலில் தாவர அடிப்படையிலான ரசாயனங்கள் 'குளுகோசினோலேட்ஸ்' உள்ளது. இது மார்பகம் முதல் புரோஸ்டேட் புற்றுநோய் வரை அனைத்து வகையான புற்றுநோய்களையும் தடுக்க உதவுகிறது.
2. நூல்கோல் போன்ற டயட்டரி நைட்ரேட் கொண்ட உணவுகள் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்கின்றன. இரத்த அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகள் ஒன்றாக ஒட்டாமல் தடுப்பது ஆகியவை இதில் அடங்கும்.
3. நூல்கோல் ஆன்டிஆக்ஸிடன்ட் லுடீன் நிறைந்த காய்கறியாகும். இது கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் ஒது மாகுலர் டிஜெனரேஷன் மற்றும் கண்புரை போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.
4. நூல்கோலில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது குடலில் உள்ள தண்ணீரை உறிஞ்சி, குடல் இயக்கங்களை எளிதாக்குவதன் மூலம் டைவர்டிகுலிடிஸ் ஃப்ளேர்களின் பரவலைக் குறைக்கும்.
5. நூல்கோலில் லிப்பிட்கள் உள்ளன. அவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். அவை உங்கள் உடலில் கொழுப்பு சேராமல் தடுக்கின்றன. மேலும், அவை இரத்த சர்க்கரை அளவையும் பராமரிக்கின்றன.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மூளையை பலவீனமாக்கும் விட்டமின் B12 குறைபாடு! தவிர்க்க சாப்பிட வேண்டியவை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ