வெற்றி எனும் சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் தளபதி விஜய் இன்று தனது திரைப்பயணத்தின் 27-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார்.
இந்நிலையில் விஜயின் 27-வது ஆண்டு திரையுலக பணத்தினை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் இணையத்தில் #27YearsOfKwEmperorVIJAY என்னும் ஹெஷ்டேகினை பிரபலமாக்கி வருகின்றனர்.
நடிகர் விஜய் ஒரு முன்னணி நடிகராக அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படம் டிசம்பர் 4, 1992-ஆம் ஆண்டு வெளியானது. அன்று துவங்கி இன்று வரை அவர் தமிழ் திரையுலகில் உட்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றார். இதனிடையே தனது திரையுலக வாழ்வினை பிரகாசமாக்க தன்னை தானே அவர் பல பயிற்சிகள் மூலம் செதுக்கியுள்ளார். தமிழ் திரையுலகின் உட்ச நட்சத்திரமாக இருக்கும் அவர் தற்போது தனது திரையுலக வாழ்வில் 27-ஆம் ஆண்டினை துவங்குகின்றார். விஜயின் இந்த வளர்ச்சியினை அவரது ரசிகர்கள் அட்டகாசமாக கொண்டாடி வருகின்றனர்.
இதனியை விஜய் 64 படத்தின் பெயராக ‘சம்பவம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
‘பிகில்’ படத்தை தொடர்ந்து விஜய் தற்போது மாநகரம், கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு தற்காலிகமாக #Thalapahty64 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இருபது நாட்களும், டெல்லியில் சுமார் ஒரு மாதமும் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கர்நாடக மாநிலத்திலுள்ள சிறைச்சாலை ஒன்றில் 30 நாட்கள் நடத்த திட்டமிட்டு அதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பு டிசம்பர் இரண்டாவது வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில் இப்படத்துக்கு சம்பவம் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அதுசம்மந்தமாக போஸ்டர்களை உருவாக்கியும் ரசிகர்கள் செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர். எனினும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. மற்றொரு பக்கம் இத்திரைப்படத்திற்கு டாக்டர் என பெயரிடப்பட்டுள்ளதாக ரசிகர்கள் இணையம் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.