ராசிபலன் 2023 செப்டம்பர் 8: இன்று இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

Astro Predictions: 2023ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 8ஆம் நாளுக்கான ராசிபலன்கள் இவை. இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 8, 2023, 05:48 AM IST
  • குழந்தையின் எதிர்காலத்தில் முதலீடு செய்யலாம்
  • பணம் வரத்து அதிகரிக்கும்
  • கல்விப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு லாபகரமான நாள்
ராசிபலன் 2023 செப்டம்பர் 8: இன்று இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!  title=

புதுடெல்லி: இன்று, நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? 2023ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 8ஆம் நாளுக்கான ராசிபலன்கள் இவை. இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். 

08-09-2023 ராசி பலன்கள்

மேஷம் 

தடைபட்டு வந்த சொத்து விற்பனைகள் சாதகமாக முடியும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். அன்பு நிறைந்த நாள்.

ரிஷபம்
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை சிலருக்கு உண்டாகும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். 

மிதுனம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் திடீர் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். வாகனம் சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.

கடகம்
கடக ராசிக்கார்களுக்கு, பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உண்டாக்கும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். வெற்றி நிறைந்த நாள்.  

சிம்மம்
கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். நண்பர்களால் வருமான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களால் அனுபவம் பிறக்கும். கவலைகள் குறையும் நாள். 

மேலும் படிக்க | சர்வார்த்த சித்தி யோகத்தினால் பம்பர் பலன்களை அள்ளப் போகும் ‘5’ ராசிகள்!

கன்னி
பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். வெளிவட்டார நண்பர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். நிதானம் வேண்டிய நாள்.

துலாம்
வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். மற்றவர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளித்துச் செயல்படவும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

விருச்சிகம்
வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புரட்சிகரமான சிந்தனைகள் மனதில் ஏற்படும். உணவு சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.     

மேலும் படிக்க | குரு-புதன் கூட்டணி வைத்து பணத்தை அள்ளிக் கொடுத்தால், சனீஸ்வரரும் தங்க மழை பொழிவார்

தனுசு
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் கிடைக்கும்.  குடும்பத்தில் கலகலப்பான சூழல்கள் உண்டாகும். வரவுகள் மேம்படும் நாள்.

மகரம்
உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். பெற்றோரிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். இணையம் சார்ந்த  துறைகளில் பணிபுரிபவர்களுக்கு பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆசைகள் பிறக்கும் நாள்.

கும்பம்
புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். முயற்சிகளை செயல் வடிவில் மாற்றுவீர்கள். உயர்கல்வியில் தெளிவு ஏற்படும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும்.

மீனம்

நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். கணிதம் சார்ந்த துறைகளில் வாய்ப்புகள் மேம்படும். விவசாயப் பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்,  உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | வேலை, வியாபாரத்தில் வெற்றி: புதன் உதயத்தால் இந்த ராசிகளுக்கு லாபமோ லாபம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News