ADMK சார்பில் போட்டியிட விருப்ப மனு வேட்பாளர்களிடம் 11,12-ல் நேர்காணல்..

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்றும் நாளையும் நேர்காணல் நடைபெறுகிறது!!

Last Updated : Mar 11, 2019, 08:15 AM IST
ADMK சார்பில் போட்டியிட விருப்ப மனு வேட்பாளர்களிடம் 11,12-ல் நேர்காணல்..  title=

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்றும் நாளையும் நேர்காணல் நடைபெறுகிறது!!

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 18 ஆம்  தேதி வாக்குப்பதிவு நடைபெறும். புதுச்சேரியிலும் அன்றைய தினமே வாக்குப்பதிவு நடைபெறும். வேட்புமனு தாக்கல் மார்ச் 19 ஆம் தேதி தொடங்குகிறது. தாக்கலுக்கான கடைசிநாள் மார்ச் 26. வேட்புமனு திரும்பப்பெறும் கடைசி நாள் மார்ச் 29 ஆம் தேதி என நேற்று தேர்தல் ஆணையர் சுனில் அரோர அறிவித்தார். இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்க்காணல் வரும் 11 மற்றும் 12 ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. 

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும், தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் மற்றும் புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளும், அதிமுகவும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் கட்சித் தலைமையகத்தில் இன்றும் நாளையும் நேர்காணல் நடைபெறுகிறது. இன்று காலையில் 10 தொகுதிகளுக்கும், மாலையில் 10 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

11 ஆம் தேதி காலை சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, விழுப்புரம். மார்ச் 11 ஆம் தேதி பிற்பகலில் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய  ஆகிய தொகுதிகளுக்கு விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மார்ச் 12 ஆம் தேதி காலை திருவள்ளூர், சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரிக்கும். பிற்பகலில், திருவண்ணாமலை, ஆரணி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், ஆகிய தொகுதிகளுக்கு விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக, 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணலை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending News