)
திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது பிரபல சைவ உணவகமான அன்னபூர்ணா உணவகம் இந்நிலையில் இன்று மதியம் இந்த உணவகத்தில் திருப்பூரை சேர்ந்த எல் ஐ.சி குழுவினர் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உணவருந்தினர். அப்போது, அவர்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான அனுபவம் ஏற்பட்டது.
குழுவாக வந்த நபர்களில் ஒரு பெண்மணிக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு, அனைவரும் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உணவக ஊழியர்களிடம் புகார் தெரிவிக்க அவர்கள் முறையான பதில் அளிக்காமல், அலட்சியம் காட்டியது, வாடிக்கையாளர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அன்னபூர்ணா உணவக நிர்வாகிகள் அலட்சியமாக இருந்ததால் , உணவகத்தின் ஊழியர்கள் மற்றும் உணவக நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, சாம்பாரில் விழுந்த கரப்பான் பூச்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

தற்பொழுது அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரபல உயர்தர சைவ உணவகத்தில் உள்ள சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் உணவருந்த வந்த பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்ததால் உணவருந்திய பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ