GST Registration: COVID-19-க்கு பிந்தைய காலத்தில் சமூக ஊடகங்களிலிருந்து அதிக எண்ணிக்கையிலான வணிகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே YouTube, Facebook, Twitter போன்ற தளங்களின் மூலம் பணம் ஈட்டுக்கொண்டிருந்தவர்கள் தங்கள் நிகர மதிப்பை நன்றாக அதிகரித்துள்ளார்கள்.
புதன்கிழமை காலை சென்னை, கோயம்புத்தூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில், பால் தினகரனுக்கு சொந்தமான வளாகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனைகளை நடத்தினர்.
Income Tax Refund: வரி (ITR) தாக்கல் செய்த உடனேயே ரீஃபண்ட் கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் பெரும்பாலும் மோசடிக்கு ஆளாகின்றனர். இணையக் குற்றங்களின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரீஃபண்டு பற்றி வரும் செய்தி அல்லது மின்னஞ்சலைத் திறக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இது உங்கள் கணக்கை ஹேக் செய்யக்கூடிய செய்தியாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு செய்பவர்களைக் கண்டுபிடிக்க ஐ-டி துறை ஒரு தேசிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி சுமார் 6,000 வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வருமான வரி (Income tax) செலுத்துவோர் வருமான வரித் துறையை ஏமாற்றுவது இனிமேல் கடினமாக இருக்கும்.
அமமுக-வின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்கு சென்றதால், மாநில அரசியல் வட்டங்களில் அரசல் புரசலாக பல வதந்திகள் பரவத் தொடங்கின.
ஒருவரிடம் பணம், தங்கம், நகைகள் அல்லது பிற மதிப்புமிக்க பொருட்களின் உரிமை இருந்து, அது வந்ததற்கான பதிவு அந்த நபரிடம் இல்லை என்றாலும், அது குறித்து அவரால் எந்த விளக்கமும் அளிக்க முடியவில்லை என்றாலும் அவர் சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடலாம்.
வருமான வரித் துறை, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பல பகுதிகளில், சுமார் 200 ஏக்கர் பரப்பில் உள்ள, வி.கே சசிகலாவின் சுமார் 65 பினாமி சொத்துகளை முடக்கியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அவர் விடுதலையாகும் நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
பான் கார்டின் பத்து இலக்கங்கள் மூலம், வங்கிக் கணக்கைத் திறப்பது, சொத்து வாங்குவது அல்லது விற்பது, கார் வாங்குவது அல்லது விற்பது, ஐ.டி.ஆர் தாக்கல் செய்வது, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நகைகளை வாங்குவது போன்ற பல விஷயங்களை நீங்கள் எளிதாக செய்யலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.