பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்வதை ஸ்டைலாக நினைப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் வெளிநாட்டு பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கு அவர் கோட் சூட் சகிதம் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்கள் மற்றும் முதலீட்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பேருந்தில் மாணவிகள் மது குடிக்கும் சீரழிவைத் தமிழகம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் என்னென்ன சீரழிவுகளையெல்லாம் பார்க்க வேண்டும் என அரசு ஆசைப்படுகிறது எனத் தெரியவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான போரில் உயிரைப் பணயம் வைத்து ஈடுபட்ட மினி கிளினிக் மருத்துவர்களைப் பணி நீக்கம் செய்யக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா நான்காவது அலை ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் மினி கிளினிக் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள், மருத்துவர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள உழவர் பட்ஜெட், மாநிலத்தை மட்டுமல்ல, மண்ணையும் காக்கும் பட்ஜெட் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழக அரசின் பட்ஜெட் தொடர்பான பின்னூட்டங்கள்... தமிழக அரசு தாக்கல் செய்த 2022-23 பட்ஜெட் "ஆறுதலும் ஏமாற்றமும் கலந்ததாக அமைந்துள்ளது” என கமல் ஹாசன் கருத்து...
காவிரி டெல்டாவின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு காவிரி டெல்டாவில் மேற்கொண்டு ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க முயலும் ஓ.என்.ஜி.சியின் நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சரைக் கேட்டுக்கொள்வதாக பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்ட உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மேகதாது அணையின் குறுக்கே அணை கட்டுவதற்காக அடிக்கல் நாட்ட கர்நாடக அரசு தயாராக இருப்பதும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தமிழக நதி நீர் நலன்களைக் காவு கொடுக்காமல் காப்பாற்ற வேண்டிய நிலையில் தமிழக அரசு இருப்பதால், என்ன செய்யப் போகிறது என அனைத்துக் கட்சிகளும் உற்று கவனிக்கத் தொடங்கியுள்ளன.
சிவி சண்முகத்தின் தரம் தாழ்ந்த விமர்சனத்துக்காக, அவரின் டவுசரை விழுப்புரம் மக்கள் கடந்த தேர்தலில் கழட்டியவர்கள் என திமுக எம்.எல்.ஏ லட்சுமணன் விமர்சித்துள்ளார்.
ஆளும் கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு எதிர்கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு என்று திமுக இரட்டை வேடம் போடுவதே வாடிக்கை என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சாடியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.