மஞ்சளின் அற்புதமான மருத்துவ பண்புகளைக் கருத்தில் கொண்டு, ஆயுர்வேதத்தில் இது முக்கியமான ஒரு மருந்தாகக் கருதப்படுகிறது. அதிலும், குளிர்காலத்தில் மஞ்சள் பால் குடிப்பதால் உடலுக்கு சூட்டை கொடுத்து குளிர் கால நோய்கள் வராமல் காக்கிறது. தினமும் மஞ்சள் பாலை குடிப்பதால் சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் நீங்கும். மஞ்சள் பால் குடிப்பவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மஞ்சளில் காணப்படுகின்றன. இது எந்த தொற்றுநோயையும் எதிர்த்துப் போராட உதவுகிறது. ஆனால் மஞ்சள் பால் அனைவருக்கும் நல்லது என கூற முடியாது. சில உடல் நல பிரச்சனைகள் இருப்பவர்கள், இதை குடிப்பதால் நன்மைக்கு பதிலாக பாதிப்பை ஏற்படுத்தும். எந்தெந்த நபர்கள் மஞ்சள் பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று பார்ப்போம். மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் சில பக்க விளைவுகள்
கல்லீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு பால் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்
உங்கள் கல்லீரல் பலவீனமாக இருந்தால் அல்லது கல்லீரல் (Liver Health) தொடர்பான நோய் இருந்தால், நீங்கள் மஞ்சள் பாலை அளவிற்கு அதிகமாக குடிக்கக்கூடாது. இதன் காரணமாக செரிமான அமைப்பு பலவீனமடையலாம். சில சமயங்களில் வயிற்றில் வீக்கமும் ஏற்படும். அமில பிரச்சனையும் ஏற்படலாம்.
இரும்புச்சத்து குறைபாடு
அதிக மஞ்சளைப் பயன்படுத்துவதால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும். இதைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், ஆனால் மஞ்சளை அதிகமாக உட்கொள்பவர்களின் உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சும் திறன் குறைகிறது. இதனால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்காமல் போகலாம். எனவே, இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், மஞ்சள் பாலை உட்கொள்வதை தவிர்க்கவும்.
மேலும் படிக்க | வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ்... உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்!
வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல்
மஞ்சளில் குர்குமின் என்ற கலவை உள்ளது. அளவிற்கு அதிகமாக குடிக்கும் போது, இது சில நேரங்களில் குமட்டல் அல்லது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். அதோடு, வயிற்றில் வாயு, வீக்கம், நெஞ்செரிச்சல் போன்ற செரிமானப் பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், மஞ்சள் பால் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மஞ்சள் கலந்த பாலை குடித்தால் செரிமான பிரச்சனை அதிகரிக்கும்.
கர்ப்ப காலத்தில் அளவிற்கு அதிகமாக மஞ்சள் பால் குடிப்பது நல்லதல்ல
மஞ்சள் பால் இயற்கையில் உடலுக்கு சூட்டை கொடுக்கக் கூடியது. எனவே கப்பிணிகள் அதை அலவிற்கு அதிகமாக குடிப்பதை தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்தில் அளவிற்கு அதிகமாக மஞ்சள் கலந்த பாலை குடிப்பதால் ரத்தம் போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. சில நேரங்களில் இது வயிற்று வலி மற்றும் குமட்டலையும் ஏற்படுத்தும். எனவே மஞ்சள் பால் குடிப்பதை தவிர்க்கவும்.
ஒவ்வாமை ஏற்படும் அபாயம்
அளவிற்கு அதிகமாக மஞ்சள் பாலை அருந்தினால், சருமத்தில் வெடிப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. சிலருக்கு தோல் எரிச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ