தமிழ்நாட்டில் சில வாரங்களுக்கு முன்பு கடுமையான மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர். ஆனால், நிலக்கரி பற்றாக்குறையால்தான் இந்த மின்வெட்டு ஏற்பட்டதாக ஆளுங்கட்சி தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மின்சாரம் என்பதில் பாகுபாடு இல்லை. எனது வீட்டிலும் காலை 2 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. அனைவருமே மின்சாரத்தை நம்பித்தான் இருக்கிறோம்.
மேலும் படிக்க | ரம்ஜானும் ஒரு திராவிட மாடல்தான் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
வீட்டில் மின்சாரம் இல்லாவிட்டால் இரவில் யாராலும் தூங்க முடியாது. அதிலும் நகர பகுதிகளில் மின்சாரம் இல்லையென்றால் தூங்கவே முடியாது. புழுக்கம் ஏற்பட்டு மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாவார்கள்.
நிலக்கரி பற்றாக்குறையின் காரணமாகத்தான் இன்றைய தினம் மின்தடை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. எனவே உடனடியாக தேவையான அளவு நிலக்கரியை கொள்முதல் செய்து, தடையில்லாத மின்சாரத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்” என கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR