மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் - யை அடுத்துள்ள சலுப்பபட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது தோட்டத்தில் மதுரை - துவரிமானைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு இளங்கோவன் மர்மான முறையில் இறந்து கிடந்த நிலையில், தகவலறிந்து விரைந்து வந்த சாப்டூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மணிமொழி தலைமையிலான போலிசார் அவரது உடலை கைப்பற்றி உடற் கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வைத்துவிட்டு தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் முன்னுக்கு பின் முரணான பதில்களை அளித்த தோட்டத்து உரிமையாளர் பாண்டியிடம் நடத்திய விசாரணை மற்றும் தோட்டத்தை சோதனை செய்த போது தோட்டத்தில் கட்டுக்கட்டாக 500 ரூபாய், 200 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ந்த போலிசார் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான கள்ள நோட்டுக்கள் மற்றும் இரண்டு ஜெராக்ஸ் மிசின்களை கைப்பற்றினர்.
ALSO READ | சீரியல் சப்தத்தில் பெண்கள் சமையல்..! பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய திருடர்கள்
மேலும் இந்த கள்ள நோட்டுகள் பதுக்கல் தொடர்பாக பாண்டியை கைது செய்த போலிசார் இந்த கள்ள நோட்டு அச்சடித்து வெளியிட்டது தொடர்பாக வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா எனவும், இறந்து கிடந்த இளங்கோவன் இயற்கையாக இறந்தாரா? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ALSO READ | பணப்பை என நினைத்து வங்கி ஊழியரின் உணவுப்பையை திருடிய நபர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR