அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. புயல் உருவாக வாய்ப்பிருப்பதால் அரபிக்கடலில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெள்ளிக்கிழமை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது, மேலும் சனிக்கிழமை முதல் இது வேகம் பெற்றும் மாநிலிதத்தில் பல இடங்களில் பரவலான மழை பெய்யும்.
நிவர் புயல் தமிழகத்தை கடந்துவிட்ட நிலையில் அடுத்த புயலுக்கான ஆயத்தங்கள் துவங்கி விட்டன. எச்சரிக்கை நிலையிலேயே இருக்கும்படி அரசாங்கமும் வானிலை ஆய்வு மையமும் கூறியுள்ளன.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.