தமிழ்நாட்டில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 300-னை தாண்டியது...

தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை 1,685 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் மாநிலத்தின் மொத்த எண்ணிக்கை 34,000-ஐ தாண்டியுள்ளது.

Last Updated : Jun 9, 2020, 08:59 PM IST
  • சென்னை புதிய தொற்றுகளை பொறுத்தவரையில் 1,243 புதிய COVID -19 தொற்றுகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சென்னையில் ஒட்டுமொத்த எண்ணிக்கையை 24,545-ஆக அதிகரித்துள்ளது.
  • எனினும் தற்போது சென்னையில் 12,570 வழக்குகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளளது.
  • செங்கல்பட்டு 158 புதிய வழக்குகளை பதிவு செய்து, இதனையடுத்து மாவட்டத்தின் மொத்த எண்ணிக்கையை 2,146-ஆக அதிகரித்தது.
  • திருவள்ளூர் இன்று 90 புதிய வழக்குகளை உறுதிப்படுத்தியுள்ளது, இதனால் மாவட்டத்தில் மொத்தம் 1,476 வழக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 300-னை தாண்டியது... title=

தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை 1,685 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் மாநிலத்தின் மொத்த எண்ணிக்கை 34,000-ஐ தாண்டியுள்ளது.

முதன்முறையாக ஒரு நாளின் இறப்பு எண்ணிக்கை 20-ஐ தாண்டியுள்ளது என்று சுகாதாரத் துறை வெயிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இன்று 21 இறப்புகள் மாநிலத்தில் பதிவாகியுள்ளன, அவர்களில் 15 பேர் அரசு மருத்துவமனைகளில் இறந்தனர், 6 பேர் தனியார் மருத்துவமனைகளில் இறந்தனர் எனவும் தமிழக அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது.

கொரோனாவை தடுக்க தமிழகம் வரும் மத்திய அரசின் நிபுணர் குழு...

சென்னை புதிய தொற்றுகளை பொறுத்தவரையில் 1,243 புதிய COVID -19 தொற்றுகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சென்னையில் ஒட்டுமொத்த எண்ணிக்கையை 24,545-ஆக அதிகரித்துள்ளது. எனினும் தற்போது சென்னையில் 12,570 வழக்குகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளளது. செங்கல்பட்டு 158 புதிய வழக்குகளை பதிவு செய்து, இதனையடுத்து மாவட்டத்தின் மொத்த எண்ணிக்கையை 2,146-ஆக அதிகரித்தது. திருவள்ளூர் இன்று 90 புதிய வழக்குகளை உறுதிப்படுத்தியுள்ளது, இதனால் மாவட்டத்தில் மொத்தம் 1,476 வழக்குகள் பதிவாகியுள்ளது.

மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 307 பேர் இதுவரை உயிர் இழந்துள்ளனர். நேர்மறையான பக்கத்தில், 798 பேர் இன்று வைரஸிலிருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ் சேவை பெற தொலைபேசி எண்கள் அறிவிப்பு...!

COVID-19 சோதனை பொறுத்தவரையில் மாநிலத்தில் 44 அரசு மற்றும் 33 தனியார் ஆய்வகங்களில் செய்யப்படுகிறது எனவும், 34,914 நபர்கள் இன்று வரை நேர்மறை சோதனை முடிவு பெற்றுள்ளனர் எனவும், 5,85,678 மாதிரிகள் எதிர்மறையான சோதனை முடிவு பெற்றுள்ளது எனவும் தமிழக அரசின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. மேலும் 579 மாதிரிகளின் சோதனை நடைப்பெற்று வருவதாகவும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

Trending News