ஆனி மாதம் 2023 ராசிபலன்: இந்த வருடம் ஆனி மாதம் 2023 ஜூன் மாதம் 16ஆம் தேதி பிறக்கிறது. அன்று சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். இது தவிர இந்த மாதத்தில், சனி வக்கிரப் பெயர்ச்சி, புதன் பெயர்ச்சி, செவ்வாய் பெயர்ச்சி, சுக்கிரன் பெயர்ச்சி ஆகியவை நடைபெற உள்ளன. இந்நிலையில் ஆனி மாதத்திற்கான அனைத்து ராசிகளுக்கும் ஆன ராசி பலன்களை அறிந்து கொள்ளலாம்.
வார ராசிபலன் 2023 ஜூன் 12 முதல் 18ம் தேதி வரை: மேஷம் முதல் மீனம் வரை வரும் வாரம் எப்படி இருக்கும், அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பது குறித்து ஜோதிட வல்லுநர்கள் கணித்த 12 ராசிகளுக்கான வாராந்திர பலன்களை தெரிந்து கொள்வோம்.
செவ்வாய் மற்றும் சனி பரஸ்பரம் எதிரி கிரகங்களாகக் கருதப்படும் நிலையில், தற்போது சனி பகவான் தனது ராசியான கும்பத்தில் இருக்கிறார். செவ்வாய் தனது ராசியை மாற்றி கடகத்தில் நுழைந்துள்ளார். இந்த வகையில் தற்போது செவ்வாய், ராசியில் சனியிலிருந்து ஆறாமிடத்தில் இருக்கிறார்.சனி மற்றும் செவ்வாய் கிரகத்தின் இந்த நிலை ஷடாஷ்டக யோகத்தை உருவாக்குகிறது.
ராகு கேது பெயர்ச்சி 2023: ராகு மேஷத்திலும் கேது துலாம் ராசியிலும் அமர்ந்துள்ளனர். அக்டோபர் 30, 2023ல் ராகு-கேதுவின் சஞ்சாரம் எந்தெந்த ராசிக்காரர்களின் வாழ்வில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும், எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசியில் புதன்: மே 15ம் தேதி இரவு 8.30 மணிக்கு புதன் மேஷ ராசிக்கு மாறி வக்ர நிவர்த்தி அடைகிறார். புதனின் இந்த சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் ஏற்படும். அவர்கள் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுதலை பெறுவார்கள்.
கிரகங்களின் இளவரசன் என கருதப்படும் செவ்வாய் மே 10ம் தேதி செவ்வாய் ராசி மாறிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், அதனால் எந்த எந்த ராசிகள் சுப பலன்களை அனுபவிப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரப்படி ஒருவரின் இயல்பு, ஆளுமை, குறைபாடுகள் மற்றும் குணங்கள், அவர் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வார் போன்றவற்றை ராசிகளின் அடிப்படையில் அறிந்து கொள்ளலாம். ஜோதிட சாஸ்திரத்தில், சில ராசிகளின் ஆண்களும் பெண்களும் அதிர்ஷ்டசாலிகள் என்பதோடு புத்திசாலிகள் என்றும், அவர்கள் தங்கள் விருப்பப்படி உலகை ஆட்டி வைக்கும் திறன் கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.
சூரியன் சக்தி, ஆற்றல் மற்றும் ஆன்மாவைக் குறிக்கும் ஒரு கிரகம். பிரபஞ்சத்தின் தந்தையாக சூரிய பகவான் அனைத்து உயிரினங்களுக்கும் மிகவும் நெருக்கமானவர். சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்து சுமார் ஒரு வருடத்தில் அனைத்து ராசிகளிலும் குடியேறி தனது சுழற்சியை நிறைவு செய்கிறார்.
செவ்வாய்ப் பெயர்ச்சி மே 2023: செவ்வாய்ப் பெயர்ச்சி மே 10 ஆம் தேதி கடக ராசியில் நடக்கப் போகிறது. அக்கினி கிரகமான செவ்வாய் கிரகத்தின் நீர் ஆதிக்கம் செலுத்தும் ராசியில் வருவதால், நாட்டிலும் உலகிலும் பெரும் எழுச்சிகளை உருவாக்கலாம், இந்த செவ்வாய் பெயர்ச்சி மழையையும் தரும்.
சூரிய ராகு யுதி 2023: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மாறுகிறது. இந்த சஞ்சாரத்தின் சுப மற்றும் அசுப பலன்களை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணலாம்.
Venus Transit 2023: ஆடம்பர வாழ்க்கை, உடல் சுகம் ஆகியவற்றோடு செல்வத்தையும் செழிப்பையும் தரக்கூடிய சுக்கிரன் ஏப்ரல் 6 ஆம் தேதி, தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார்.
ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் அறிவுக்கும் ஞானத்துக்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகம் வித்யாகாரகன் எனப்படும் புதன் கிரகம் தான். இந்நிலையில் புதன் கிரகம் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் மேஷ ராசியில் வக்ரமடைய உள்ளது.
Sun Transit 2023: தமிழ் புத்தாண்டான சித்திரை மாத தொடக்கத்தில், அதாவது ஏப்ரல் 14ம் தேதி சூரியன் மீன ராசியை விட்டு மேஷ ராசியில் பிரவேசிக்கப் போகிறார். அதோடு இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி நிகழ உள்ளது. இந்த நேரத்தில், இந்த நேரம் மொத்தம் 7 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பணம், தொழில், ஆரோக்கியம் போன்ற விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
நவபஞ்சம யோகம் என்பது இரு கிரகங்கள் பரஸ்பரம் ஒரு முக்கோண பாவத்தில் அமைந்தால் உருவாகிறது. இந்த நேரத்தில் சூரியன், செவ்வாய் மற்றும் குரு மிகவும் சிறப்பான நிலையில் இருப்பதால் நவபஞ்சம் ராஜயோகம் உருவாகிறது.
புதன் பெயர்ச்சி பலன்கள்: மார்ச் 31-ம் தேதி மேஷ ராசியில் புதன் கிரக பெயர்ச்சி ஆகியுள்ள நிலையில் இதனால் சில ராசிக்காரர்கள் சவால்களையும் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
April Health Horoscope: ஆரோக்கியம் நன்றாக இருந்தால் தான், உழைத்து வாழ்க்கையில் முன்னேற முடியும். அதே போல் பணம் சம்பாதிக்க முடியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்று ஏப்ரல் மாதத்திற்கான ஆரோக்கியம் தொடர்பான ராசி பலனை அறிந்து கொள்ளலாம்.
ஜோதிடத்தின்படி, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி சுக்கிரன் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் சஞ்சரிப்பதன் மூலம், அது தனது சொந்த ராசியான ரிஷபத்தில் நுழையும். ரிஷப ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும். சுக்கிரன் மே 2, 2023 வரை ரிஷப ராசியில் இருக்கிறார். சுக்கிரனின் மாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும், ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இது மிகவும் சாதகமாக இருக்கும். இவர்கள் உடல் சுகங்கள், மகிழ்ச்சி, அன்பு, அழகு, ஆடம்பரம், புகழ் பெறுவார்கள்.
சுக்கிரன் கிரகம் உடல் சுகம், ஆடம்பரம், மகிழ்ச்சி, செல்வம், அன்பு, காதல், அழகு, ஈர்ப்பு மற்றும் புகழ் ஆகியவற்றை அளிக்கிறது. எனவேதான்ஆடம்பரமான ராஜ போக வாழ்க்கையை அனுபவிக்க ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பது அவசியம். சுக்கிரனின் ராசி மாற்றம் 12 ராசிகளின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வரும் 6 ஏப்ரல் 2023 அன்று சுக்கிரன் தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்குள் பிரவேசிக்க உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.