Mercury Combust: புதன் எரிப்பு நிலை ஏற்படுத்தும் பிரச்சனைகள்! பாவம் இந்த ‘5’ ராசிக்காரர்கள்!

Mercury Combust In Taurus 2024 June 02: ரிஷபத்தில் ஏற்படவிருக்கும் புதன் எரிப்பு நிலையானது, 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்பதை தெரிந்துக் கொள்வோம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 25, 2024, 08:43 PM IST
  • ரிஷபத்தில் புதன் எரிப்பு நிலை
  • கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
  • அறிவை மந்தமாக்கும் புதன் எரிப்பு நிலை
Mercury Combust: புதன் எரிப்பு நிலை ஏற்படுத்தும் பிரச்சனைகள்! பாவம் இந்த ‘5’ ராசிக்காரர்கள்! title=

ரிஷப ராசியில் புதன் எரிப்பு: நவகிரகங்களில் அறிவுக்கு அதிபதியான புதன், ஜூன் 2, 2024 அன்று 18:10 மணிக்கு ரிஷப ராசியில் எரிப்பு நிலைக்கு செல்கிரார். ரிஷபத்தில் ஏற்படவிருக்கும் புதன் எரிப்பு நிலையானது, 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்பதை தெரிந்துக் கொள்வோம்...

அறிவு, வாத-விவாதங்கள், நுண்ணறிவு கல்வி கலை, பேச்சாற்றல் என அறிவுபூர்வமாக செயல்படுபவர்களின் அறிவாற்றல் அனைவராலும் மெச்சப்படுகிறது. அவர்களே அனைவராலும் மதிக்கப்படுகின்றன, பிரபலமாவதற்கும், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் அறிவைத் தரும் கிரகம் புதன் அகும்.

அறிவுக்காரகரான புதன் வலுவிழந்தால், பாதுகாப்பற்ற உணர்வுகள், கவனக்குறைவு, கிரகிக்கும் சக்தியின்மை மற்றும் நினைவாற்றல் இழப்பு ஆகியவை சில சமயங்களில் ஏற்படலாம். ஜோதிடத்தில் எரிப்பு என்பது, ஒரு கிரகமானது, தனது வலிமை மற்றும் நன்மை செய்யும் குணத்தை ஒட்டுமொத்தமாக இழக்கும் நிகழ்வு ஆகும். அதாவது வல்லமை பொருந்திய ஒருவர், தனது சக்திகளை இழந்து நிற்பதற்கு எரிப்பு நிலையை ஒப்பிட்டுச் சொல்லலாம்.  

மேலும் படிக்க | ஏழரை சனியா? அஷ்டம சனியா? சனீஸ்வரரை குளிர்விக்கும் இந்த மந்திரங்கள் இருக்க கவலையேன்?

கிரகங்களில் ராகு மற்றும் கேதுவைத் தவிர வேறு எந்த கிரகமும் சூரியனுக்கு அருகில் அதாவது பத்து டிகிரிக்குள் வரும்போது எரிப்பு நிலை ஏற்படுகிறது, ஏனென்றால், இந்த வரம்புக்குள் வரும் கிரகத்தை பலவீனப்படுத்தும் சக்தியை சூரியன் பெறுகிறது. ரிஷப ராசியில் புதன் எரிப்பு நிலைக்கு செல்வதால், பலரின் வாழ்வில் சுணக்கம் ஏற்படும். அதில், மிகவும் மோசமாக பாதிக்கப்படும் ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசியில் புதன் எரிப்பு காலத்தில் பணப்பிரச்சனையுடன் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். தனிப்பட்ட உறவுகளில் வாக்குவாதம், சண்டை ஏற்படலாம். தொழில் ரீதியாக, சவால்கள் மற்றும் அதிருப்தி உணர்வு ஆகியவை ஏற்பட்டு, மனதில் கவலையைக் கொடுக்கும். இதனால் தொழில் அல்லது வேலையில் முன்னேற முடியாமல் தடை ஏற்படும். வயிற்றுவலி, காது வலி என வலிகள் வருவதற்கான வாய்ப்புகளும் தென்படுவதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.  

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு, தனிப்பட்ட வளர்ச்சி பாதிக்கப்படும், காரியத் தடைகளை சந்திக்கலாம். , குழந்தைகளைப் பற்றிய கவலைகள் எழும் வாய்ப்புகள் உள்ளன. சக ஊழியர்களுடன் பழகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சேமிப்பு குறைவாகவே இருக்கும். உடல்நலம் பாதிக்கப்படலாம் என்பதால் கவனமாக இருக்கவும்.

மேலும் படிக்க | குரு உதயம்: 5 ராசிகளுக்கு அட்டகாசமான நேரம்... குபேர யோகம்

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு, புதன் எட்டாம் மற்றும் பதினொன்றாம் வீட்டு அதிபதியாக இருப்பதால், நண்பர்களை இழக்க நேரிடலாம் நட்பு பிரிந்து போவதால், மனதில் சுமையும் கவலைகளும் அதிகமாகும். உங்களுக்கு அங்கீகாரம் சரியாக கிடைக்கவில்லை என்ற எண்ணங்கள் ஏற்படலாம்.  

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு உறவுகளில் பின்னடைவுகளை சந்திக்கலாம், வியாபாரம் மற்றும் தொழிலில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. மனதில் திருப்தியே இல்லாமல் போகும். சரியான விஷயம் கூட உங்களுக்கு தவறாக தோன்றலாம். புதனின் எரிப்பு நிலை முடிந்ததும் மனதில் தெளிவு பிறக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு வேலையில் திருப்தி இல்லாமல் இருக்கலாம். வியாபாரத்த்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். குடும்பச் செலவுகள் அதிகரிக்கும்.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் அட்டகாசமான வளர்ச்சி.... பண மழையில் நனைவார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News