Tamil Nadu Today Latest News Live Updates: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு (EVKS Elangovan Funeral) இன்று மாலை நடைபெறுகிறது. அவரது இறுதி ஊர்வலம் இன்று பிற்பகலில் தொடங்கும். தொடர்ந்து மாலை மணப்பாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் இறுதிச் சடங்கு செய்யப்படும் என கூறப்படுகிறது.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் (AIADMK Committee Meeting) இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.
பார்டர் - கவாஸ்கர் கோப்பை (Border Gavaskar Trophy) தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா (India vs Australia) அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் காபா நகரில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டு மழையால் தடைப்பட்ட நிலையில், இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் இதுவரை எவ்வித மழை குறுக்கிடும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், உள்ளூர், மாநில, தேசிய, விளையாட்டு, சினிமா, அரசு திட்டங்கள் என இன்றைய (டிச. 15) முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.