செவ்வாய் கிரகத்தில் அதிரடி மாற்றம்! தீவிரமாய் ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் தரும் லேட்டஸ்ட் அப்டேட்!

Mysterious landforms Rising On Mars : ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) மார்ஸ் எக்ஸ்பிரஸ், சிவப்பு கிரகமான செவ்வாயின் தென் துருவப் பகுதியில் சில குறிப்பிடத்தக்க மர்மமான அம்சங்களைக் கண்டறிந்துள்ளது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 16, 2024, 11:54 AM IST
  • செவ்வாய் கிரகத்தில அதிகரிக்கும் மர்மமான நிலப்பரப்புகள்!
  • இருண்ட பகுதிகளால் சூழப்பட்ட நிலப்பரப்புகள்...
  • ஆஸ்ட்ரேல் ஸ்கோபுலியில் கண்டறியப்பட்டுள்ள மர்மம்...
செவ்வாய் கிரகத்தில் அதிரடி மாற்றம்! தீவிரமாய் ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் தரும் லேட்டஸ்ட் அப்டேட்! title=

பிரபஞ்சத்தில் ஏற்படும் மாற்றங்கள் மனிதர்களின் வாழ்விலும் எதிரொலிக்கும். அதனால் தான் வானியல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புகளுக்கு எப்போதுமே முக்கியத்துவம் அதிகமாக கொடுக்கப்படுகிறது. அண்மையில், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) மார்ஸ் எக்ஸ்பிரஸ், சிவப்பு கிரகமான செவ்வாயின் தென் துருவப் பகுதியில் சில குறிப்பிடத்தக்க மர்மமான அம்சங்களைக் கண்டறிந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மர்மமான நிலப்பரப்புகள் அதிகரித்து வருவதற்கான காரணங்கள் என்ன என்பது தெரியவில்லை. ஆனால், அது தொடர்பான விவாதங்களும், ஆலோசனைகளும் அதிகரித்துள்ளன.

செவ்வாய் கிரகத்தின் ஆஸ்ட்ரேல் ஸ்கோபுலி (Australe Scopuli) பகுதியில், பனிக்கட்டி பகுதிகளை விட இருண்ட பகுதிகளால் சூழப்பட்ட மர்மமான நிலப்பரப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பனிக்கட்டிப் பகுதிகளை விட இருண்ட பகுதிகளால் சூழப்பட்ட நிலப்பரப்புகள், 'மறைவான நிலப்பரப்பு' என்று பெயரிடப்பட்டுள்ளன.

நிலபரப்பு அதிகரிப்பதன் பின்னணி காரணம் என்ன?

இளவேனிற்காலம் வரும்போது, ​​பனிக்கட்டி, விரைவாக திட நிலையில் இருந்து நீராவியாக மாறுகிறது. இந்த இயற்கை நிகழ்வின் காரணமாக செவ்வாய் கிரகத்தின் மெல்லிய வளிமண்டலத்தில் கணிசமான அளவு வாயு வெளியேறுகிறது. நீராவி ஒடுங்குவது, பரப்புகள் அதிகரிக்கும் இந்த நிகழ்வானது, இலையுதிர் காலத்தில் தலைகீழாக மாறும். இப்படி மாறி மாறி நடைபெறும் செயல்பாடுகளால், மர்மமான நிலப்பரப்புகள்  உருவாகின்றன.

அதிகரிக்கும் நிலப்பரப்பு, ஆஸ்ட்ரேல் ஸ்கோபுலியில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது, இந்த அவதானிப்பு, செவ்வாய் கிரகத்தின் தெற்கு அரைக்கோளத்தில் வசந்த காலத்தில் செவ்வாய் எக்ஸ்பிரஸ்ஸில் உள்ள உயர் தெளிவுத்திறன் ஸ்டீரியோ கேமராவால் (HRSC) படமாக்கப்பட்டது.

மேலும் படிக்க | சன்ரூஃப் கார் வாங்கினா மட்டும் போதாது... இந்த விஷயம் தெரியலைன்னா சிக்கல்ல மாட்டிப்பீங்க! கவனம்...

ஆஸ்ட்ரேல் ஸ்கோபுலி 
ஆஸ்ட்ரேல் ஸ்கோபுலி பனிக்கட்டியின் அடுக்கு படிமங்களைக் கொண்டுள்ளது, இது துருவ அடுக்கு வைப்புகளின் மென்மையான மேற்பரப்பிற்கு அடியில் பல்வேறு அளவிலான தூசுகளால் நிரம்பியுள்ளது.  இந்த பிராந்தியத்தின் மையத்தில் மறைவான நிலப்பரப்பு உள்ளது, இது பனிக்கட்டியின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் இருண்டதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்தில், இருண்ட மைய நிலை பல்வேறு அளவுகளில் பல்வேறு வகையான பலகோண வடிவங்களால் மூடப்பட்டிருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது. இதற்கிடையில், பூமியின் ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் காணப்படும் ஒரு வடிவமான பலகோண விளிம்புகள் செவ்வாயின் உறைபனியில் இருப்பதாகவும் தோன்றுகிறது,

நீர் இருப்பு

இத்தகைய வடிவங்கள் பொதுவாக நிலத்தில் நீர் பனியாக உறைந்திருப்பதைக் குறிக்கும் என்பதும், பிரகாசமான மற்றும் இருண்ட விசிறி வடிவ வைப்புக்கள் காற்றின் திசையில் தோன்றும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வசந்த காலத்தின் துவக்கத்தில், சூரிய ஒளி ஒளிஊடுருவக்கூடிய கார்பன் டை ஆக்சைடு வளி, பனி அடுக்கு முழுவதும் ஊடுருவி, அதன் அடிப்பகுதியின் வெப்பமயமாதலுக்கு வழிவகுக்கிறது என்றால், மேற்பரப்பு வழியாக, வாயுவின் ஜெட் வெடிப்புகள் வருவதும், கீழே இருந்து இருண்ட தூசி வந்து படிவதும் இந்த நிலபரப்பு உருவாவதற்குக் காரணமாக இருக்கலாம்.

மேலும் படிக்க | ஏலியன்கள் இருப்பது உண்மை தான்... ஆதாரங்கள் விரைவில்! நாசாவுடன் பணியாற்றியவர் தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News