Kallakurichi Hostel: பள்ளியில் நடைபெற்று வந்த விடுதியானது அனுமதி பெறாமல் முறைகேடாக செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதுக்குறித்து எப்ஐஆர் பதிவு செய்யவேண்டும் எனக் கோரிக்கை
விழுப்புரம் அருகே தனது இருசக்கர வாகனத்தை திருடியவர்கள் குறித்து ஆதாரத்துடன் போலீசில் புகார் அளித்த கல்லூரி மாணவரைக் கொலை செய்த மர்ம கும்பல், சடலத்தை கிணற்றில் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Kallakurichi: கள்ளக்குறிச்சியில் மிகப்பெரிய கலவரம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்பாகவே மாநில உளவுத்துறை எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஆன்லைன் மூலம் போதை மருந்துகளை விநியோகம் செய்த நபரை மதுக்கரை தனிப்படை போலீஸார் கும்பகோணத்தில் வைத்து கைது செய்தனர்.
Crime: கிராம நிர்வாக அலுவலர் உட்பட ஆறு பேர் மீது நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டு தர கோரி பணத்தை பறிகொடுத்த உறவினர்கள் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
வண்ணாரப்பேட்டையில் பகோடா சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் போன நபரிடம் கடைக்காரர் பணம் கேட்டுள்ளார். இதற்கு அந்த நபர் கடைக்காரரை அடித்து காயப்படுத்தியுள்ளார்.
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலைக்கு ஆட்கள் எடுப்பது குறித்து தகவல் கிடைத்தவுடன், அந்தப் பணியில் சேர்வதற்காக செவிலியர் விண்ணப்பித்துள்ளார்.
ஒகேனக்கல் ஆலம்பாடி பகுதியில் கடலூர் அடுத்த எஸ். புதூர் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் சந்தோஷ் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாமூல் வாங்கும் காவல் துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டுமல்லாமல், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தில் ஏற்பட்ட இரட்டைக் கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தாம்பரம் அருகே வனப்பகுதியில் பெண் எழுப்பு கூட்டினை கண்டெடுத்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த எலும்பு கூடு, பெண் மதபோதகர் என்பது தெரியவந்துள்ளது.
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்ல இருந்த அரசு பேருந்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை, ஏஎஸ்ஐ ஒருவர் தனது உறவினருக்கு இருக்கை வேண்டும் என்பதற்காக வலுகட்டாயமாக எழச் செய்தார்.
LockUp Deaths Of DMK Government : கொடுங்கையூரில் விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இது, லாக்-அப் மரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பொறுப்பேற்று ஓராண்டு ஆகியுள்ள திமுக ஆட்சியில் லாக் அப் மரணங்கள் என சொல்லப்பட்ட, சந்தேகிக்கப்படுகிற, விசாரணையில் உள்ள மரணங்களைக் குறித்து விரிவாக ஆராயலாம்.!
ஆடி கார் வாங்கிக் கொடுக்காததால் மூன்றாம் ஆண்டு திருமண நாள் அன்று மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்திருக்கிறார் கணவர். பெண்ணின் பெற்றோர் போலீசில் கதறி அழுத காட்சி மனதை உருக்குவதாக இருந்தது.
ராமேஸ்வரத்தில் புனிதமான அக்னி தீர்த்த கடற்கரையில் கணவன் மற்றும் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராமேஸ்வரம் மக்களையும் ராமேஸ்வரத்திற்கு வந்திருந்த பக்தர்களையும் கவலை அடையவைத்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.