கோவில்பட்டியில் மது போதையில் முன்னாள் இராணுவ வீரர் அதிவேகமாக கார் ஓட்டிச்சென்று மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரால் தேடப்பட்டு வரும் நடிகை கஸ்தூரி ஆந்திராவில் பதுங்கியிருப்பதாகவும், அவரைத் தேடி தனிப்படை போலீசார் ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது இளைஞர் ஒருவர் நடிகர் விஜயின் புகைப்படத்தை காட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிய வருகின்றது. கடந்த வாரம் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது, அருகில் இருந்த இளைஞர் ஒருவர், - திடீரென தனது செல்போனில் இருந்த விஜய் போட்டோவை காட்டிச் சென்றுள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகம் என்கிற ஆலமரத்தை அறுப்பதற்கு வந்த 21-வது பிளேடு தான் தவெக தலைவர் விஜய் என்று தமிழ்நாடு பாடநூல் தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.
அடுத்த 36 மணி நேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை அருகே ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுக்காகப் பொதுமக்களின் காலணிகளைச் சுத்தம் செய்து நிதி திரட்டும் பேராசிரியரின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நாகையில் மக்களுக்கு வழங்க வேண்டிய கூட்டுக் குடிநீரை மடை மாற்றி, தனியார் கல்லூரி நிர்வாகம் நூதன முறையில் திருடிய விவகாரம் ஆட்சியர் நடத்திய ஆய்வில் அம்பலமாகியுள்ளது.
பொள்ளாச்சி அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இவ்விபத்து குறித்து தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் கள்ள சந்தையில் குறைவான விலையில் தங்கம் வாங்கித் தருவதாக கூறி பலரிடமும் பணம் பெற்று 47 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த தம்பதியை குற்றவியல் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.