TN Latest News: தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இல்லை எனவும் விமான நிலையங்களிலும் துறைமுகங்களிலும் தொடர்ந்து பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
தமிழகத்தில் புதிதாக 115 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பத்து தொழிற்பேட்டைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு வேஷ்டி-சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு; 1.77 கோடி சேலைகள், 1.77 கோடி வேஷ்டிகள் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால கெடுவிற்குள் உற்பத்தி செய்து வழங்கிடவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Tamil Nadu Latest News Updates: சமூக வலைதலமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் மருத்துவருக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெலிகாம் நிறுவனத்தின் இருந்து பேசுவதாக கூறி தன்னை மோசடி செய்ய முயற்சி செய்ததாக நடிகை சனம் செட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம்கிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு யாரும் சிக்கி கொள்ளதீர்கள் என்றும் விழிப்புணர்வு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வைரல் ஆகி உள்ளது ...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் எஸ்.பி.ஐ வங்கியில் இரவு இடைவிடாது ஒலித்த எச்சரிக்கை அலாரத்தால் பரபரப்பு ஏற்பட்டது. வங்கி பூட்டை உடைத்து உள்ளே புகுந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நடத்திய விசாரணையில் அங்கு நடைபெற்ற சம்பவம் போலீசாலை கதிகலங்க வைத்துள்ளது.
Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடியான சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியான சஜித்தை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சஜித்தின் பின்னணி குறித்து இங்கு காணலாம்.
Jagathrakshakan ED Case: சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 908 கோடி ரூபாய் அபராதம் விதிப்பதாக அமலாக்கத்துறை இன்று அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்தாலும் தமிழ்நாடு பற்றியேதான் என் மனது சிந்திக்கும், பார்வை கண்காணிக்கும் என்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Tamil Nadu Latest News: தமிழக பாஜக தலைவராக செயல்பட அண்ணாமலைக்கு தகுதியில்லை என்றும் அண்ணாமலை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அளிக்க முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசி உள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை அவதூறாகப் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையைச் சாலையில் எரித்து பாஜகவினர் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்றவர்களுக்காக 60 ஆண்டுகளுக்கு முன்பே எம்ஜிஆர் பாடல் பாடி வைத்து சென்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தது மட்டுமல்லாமல் பாடல் ஒன்றையும் பாடி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுக்க வேண்டும் என்றும், வார்த்தைகள் கடுமையாக இருக்க வேண்டாம் என்றும் அண்ணாமலைக்கு தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் கருத்து குறித்த கேள்விக்கு நகைச்சுவையாகப் பேசியதைப் பகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், தங்களது நட்பு தொடரும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே 25 ஆண்டுகள் தனி நபரின் கட்டுப்பாட்டில் இருந்த அரசுக்குச் சொந்தமான இடத்தை கிராம மக்கள் ஒன்றுகூடி சூறையாடிய வீடியோ வைரலாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.